ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி


ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 24 Aug 2021 9:09 PM IST (Updated: 24 Aug 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி

கோவை

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இணையதளம் வசதி மற்றும் 20 கணினிகளுடன் 'ஹைடெக் லேப்' என்ற ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளன. 


அடுத்த மாதம் (செப்டம்பர்) பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் நடக்கின்றன. இதையொட்டி  முதுகலை ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி கடந்த 13 -ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது.

கோவையில் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. 

துணிவணிகர் சங்க பள்ளி, சிங்காநல்லூர் பள்ளி உள்பட மொத்தம் 158 மையங்களில் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) வரை நடைபெற உள்ளது. 

பயிற்சியில் தொழில்நுட்ப வசதிகளு டன் கற்பித்தல் மேம்பாடு, பாட கருத்துகளுக்கு வீடியோ உருவாக்கு வது, யு-டியூப் சேனல் உருவாக்குவது, கணினி ஆய்வகத்தை பயன்படுத் தும் முறை உள்ளிட்டவை குறித்து அளிக்கப்படுகிறது. 

அந்தந்த பள்ளி ஆய்வகத்திலோ அல்லது பள்ளிகளிலோ உரிய சமூக இடைவெளியை பின்பற்றி, பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.


Next Story