மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆன்லைன் மூலம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து உடுமலை, குடிமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆன்லைன் மூலம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து உடுமலை, குடிமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
போடிப்பட்டி
மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆன்லைன் மூலம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து உடுமலை, குடிமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
பாசன சபை தேர்தல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆன்லைன் மூலம் நேற்று நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கூட்ட அரங்கிலிருந்து பங்கேற்றனர்.
அப்போது விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
100 நாள் வேலைத் திட்டத்துக்கு கூலி ரூ.300 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் களையெடுக்கக் கூட ஆளில்லாமல் நெற்பயிர்கள் முதல் அனைத்து விதமான விவசாயங்களும் பாழாகி வருகிறது. எனவே 100 நாள் வேலைப்பணியாளர்களை, களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
அமராவதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பெருமளவு தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது. எனவே விரைவில் பாசன சபைக்கான தேர்தலை நடத்த பரிந்துரைக்க வேண்டும்.
தாய்க்கோழி பண்ணை
கடத்தூர் பகுதியில் கடைமடைப் பகுதி வரை செல்லும் பாதையை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பாதை சேதமடைந்துள்ளதால் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து வரவும் சிரமப்படுகிறோம். எனவே இந்த பாதையை சீரமைத்துத் தர வேண்டும். இயற்கை முறை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் இயற்கை முறை சாகுபடி விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வண்ணம் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளிநடப்பு
இந்த நிலையில் குறைதீர்க்கும்நாள்கூட்டம் தொடங்குவதற்கு காலதாமதமானதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், விவசாய விழிப்புணர்வு சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், கொங்குநாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இணைந்து பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக, இந்த கூட்டம் காணொலி மூலம் நடத்தப்படுகிறது. புதிய கலெக்டர் பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி, முதல் கூட்டம் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த கூட்டம் ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கியது. அதிலும் மாவட்ட கலெக்டர் சிறிது நேரமே பங்கேற்றார்.
அதுபோல நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கவேண்டிய கூட்டம் 12 மணியாகியும் தொடங்கவில்லை. கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான பதிலும் வழங்கவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் கலெக்டர் அக்கறை கொள்ளாததையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story