கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை மறுநாள் நிறைவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை மறுநாள் நிறைவு
x
தினத்தந்தி 24 Aug 2021 10:03 PM IST (Updated: 24 Aug 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 சதவீத மானியத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நிறைவு பெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. எண்.59, கோபுரம் டவர்ஸ், 3-வது மாடி, துருகம் சாலை, கள்ளக்குறிச்சி-606 602, போன் 04151-290825 என்ற முகவரியில் உள்ள கள்ளக்குறிச்சி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

முதலீட்டு மானியம்

இச்சிறப்பு தொழில் கடன் முகாம் மூலம் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6 சதவீதம் வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். திட்டத்திற்கு ஆய்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Next Story