2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டும்பணிக்கு வர அனுமதி


2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டும்பணிக்கு வர அனுமதி
x
தினத்தந்தி 24 Aug 2021 10:25 PM IST (Updated: 24 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படு கிறது. இதில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித் துள்ளார்.

ஊட்டி

வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படு கிறது. இதில் 2 ேடாஸ்  தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதி  வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டி தனியார் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரியில் 2 கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பாடங்களை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிய உணவு இடைவேளையில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி கட்டாயம்

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள்  கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரக்கூடாது. பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் வருகை, ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் EMIS என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தற்போது மாற்று சான்றிதழ் பெற்றவர்கள் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், சான்றிதழ் பெறாதவர்களை கண்டுபிடித்து வழங்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நேர்முக உதவியாளர் பூபாலன், குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன், வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலமுருகன், சரவணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story