திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.


திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
x
தினத்தந்தி 24 Aug 2021 10:35 PM IST (Updated: 24 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

திருப்பூர்
திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குளம்போல் தேங்கும் கழிவுநீர்
திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே சாலையோரதத்தில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த கால்வாயிலிருந்து கழிவுநீர் நிரம்பி வழிந்து சாலையில் பாய்ந்து வருகிறது. குறிப்பாக ஆர்.வி.இ.நகர் பிரதான வீதி- காங்கேயம் ரோடு சந்திப்பில் கழிவுநீர் அதிக அளவில் சாலையில் நிரம்பி வழிகிறது. 
இதனால் இங்கு கழிவுநீர் குளம் போல்  தேங்கி நிற்கிறது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் இங்கு அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 
வாகன ஓட்டிகள் அவதி
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கனரக வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது கழிவுநீர் தெறிக்கின்றது. இதனால் அவர்களின் ஆடைகள் நாசமடைகிறது. மேலும், இங்கு கழிவு நீர் தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
 இங்கு கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதும், மாநகராட்சி சார்பில் கால்வாய் சுத்தம் செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே இங்கு கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Next Story