ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
ஒசூர்,
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது31). இவர், ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில், துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள தண்ணீர் குட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (23). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதையறிந்த அருளின் பெற்றோர் கடந்த ஜூன் மாதம் மோனிசாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால் மோனிசாவின் பெற்றோர், அருளுக்கு பெண் கொடுக்க மறுத்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 20-ந்தேதி காதல் ஜோடி ஓசூர் அருகே உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டது. இதனைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story