ரோப்காரில் பொருத்துவதற்காக கொல்கத்தாவில் இருந்து வந்த பிரத்யேக சாப்ட்டு


ரோப்காரில் பொருத்துவதற்காக கொல்கத்தாவில் இருந்து வந்த பிரத்யேக சாப்ட்டு
x
தினத்தந்தி 24 Aug 2021 10:35 PM IST (Updated: 24 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்துவதற்காக, கொல்கத்தாவில் இருந்து பிரத்யேக சாப்ட்டு வரவழைக்கப்பட்டது.

பழனி: 

 ரோப்கார் பராமரிப்பு பணி
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின் இழுவை ெரயில் மற்றும் ரோப்கார் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இதில் பெரும்பாலான பக்தர்கள், ரோப்காரில் செல்வதையே விரும்புகிறார்கள்.
இயற்கை அழகை ரசித்தபடி 3 நிமிடத்தில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலை சென்றடைய முடியும். இதேபோல் அங்கிருந்து அடிவாரத்தை வந்தடையலாம். 
ரோப்கார் பராமரிப்பு பணி தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு 1 நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நடைபெறுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான பராமரிப்பு பணி கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

 வல்லுனர் குழுவினர் சோதனை
மேல்தளம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள உதிரிபாகங்கள், பெட்டிகள் மற்றும் கம்பி வடம் கழற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய பாகங்கள் சோதனை செய்யப்பட்டது. மேலும் பிரத்யேக ‘சாப்ட்டு' வாங்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 
இதையடுத்து கொல்கத்தாவில் இருந்து பிரத்யேக ‘சாப்ட்டு' நேற்று வரவழைக்கப்பட்டது. அதனை, சோதனை செய்வதற்காக சென்னையில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்தனர். அவர்கள் ‘சாப்ட்டு' உறுதித்தன்மையை பரிசோதனை செய்தனர். இன்று (புதன்கிழமை) ‘சாப்ட்டு' ரோப்காரில் பொருத்தப்படுகிறது. 

இதேபோல் ரோப்காரின் மற்ற பாகங்கள் பொருத்தும் பணியும் நடைபெற உள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை ஓட்டத்துக்கு பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்படும்.

  கூட்ட நெரிசல்
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, தற்போது வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது ரோப்கார் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின் இழுவை ெரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரோப்கார் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story