ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய்


ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 24 Aug 2021 10:53 PM IST (Updated: 24 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பழனி: 

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கரூர் மண்டல உதவி ஆணையர் சூரியநாராயணன், பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. 

இதில் உண்டியல் காணிக்கை மூலம் நேற்று ரூ.1 கோடியே 90 லட்சத்து 67 ஆயிரத்தி 780-ம், தங்கம் 398 கிராம், வெள்ளி 4½ கிலோ (4540 கிராம்) மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 109 கிடைத்துள்ளது. 

நேற்றும், நேற்று முன்தினம் சேர்த்து ரூ.4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 830-ம், தங்கம் 1¾ கிலோவும் (1,771 கிராம்), வெள்ளி 19¾ கிலோவும் (19,859 கிராம்) வெளிநாட்டு நோட்டு கரன்சிகள் 200-ம் கிடைத்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.


Next Story