உடுமலையில் செவிலியர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
உடுமலையில் செவிலியர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
உடுமலை
உடுமலை நெடுஞ்செழியன் காலனியைச்சேர்ந்த சேகர் என்பவர் விபத்தில் காயமடைந்ததால் அவரை சிகிச்சைக்காக உடுமலை- பழனிசாலையில் உள்ள கோகுல் பாலிகிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு வந்த நெடுஞ்செழியன் காலனியைச்சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் செவிலியர்களை தாக்கி, மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக, மருத்துவ மனையில் பணியாற்றும் செவிலியர் செல்வி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் (வயது28), வெங்கடேஷ் (28) ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்தவழக்கு சம்பந்தமாக உடுமலை அருகில் உள்ள ஏரிப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த விஜயகுமாரை (19) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story