ரூ 21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ரூ 21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
பொள்ளாச்சி
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டாரம் மற்றும் உடுமலை பகுதியை சேர்ந்த 98 விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர்.
கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன்படி 255 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.91.10 முதல் ரூ.102.85 வரையும், 240 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.69.50 முதல் ரூ.80 வரையும் ஏலம் போனது.
அதிகாரி ஆய்வு
கடந்த வாரத்தை விட 30 மூட்டை வரத்து குறைந்து இருந்தது. மேலும் விலையும் ரூ.1.20 குறைந்தது. ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது. இந்த ஏலத்தை கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் கவுசல்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
விவசாயிகள் செல்போனுக்கு கொப்பரை தேங்காயின் எடை, விலை விவரம் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் உடனயாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து ஏலம் நடைபெற்றது. ஆய்வின் போது ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story