100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இளையான்குடி அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி வட்டார சுகாதாரத்துறையின் சார்பாக கோச்சடை, சிங்கத்துறைப்பட்டி ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சாலைக்கிராமம் நடமாடும் அரசு மருத்துவமனை மருத்துவ குழு சார்பில் டாக்டர் சலாஹுதீன் தலைமையில் மருத்துவ குழுவினர் தடுப்பூசி முகாமை நடத்தினர். முகாமில் 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இளையான்குடி வட்டாரத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story