முனியாண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை


முனியாண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை
x
தினத்தந்தி 24 Aug 2021 11:14 PM IST (Updated: 24 Aug 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

முனியாண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.

ஆதனக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் கிராமத்தில் முனியாண்டவர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கிடா வெட்டு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜையில் முனியாண்டவர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு கிடா வெட்டி படையலிடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஆட்டுக்கிடாய், கோழி உள்ளிட்டவைகளை வழங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் தொண்டைமான்ஊரணி, கணபதிபுரம், மோளுடையான்பட்டி, மீனம்பட்டி, சீப்புக்காரன்பட்டி, வண்ணரபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் படையலிடப்பட்ட கறிசோறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Next Story