திருக்கோவிலூர் அருகே மினி லாரி மோதி 5 வயது சிறுவன் பலி தாய் கண் எதிரே நிகழ்ந்த பரிதாபம்
திருக்கோவிலூர் அருகே தாயின் கண் எதிரே மினி லாரி மோதி 5 வயது சிறுவன் பலியானான்
திருக்கோவிலூர்
மினிலாரி மோதியது
திருக்கோவிலூர் அருகே உள்ள ஐதராபாக்கம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் நரேந்திரன்(வயது 5). இவன் சம்பவத்தன்று தனது தாயார் ரஞ்சிதாவுடன் திருக்கோவிலூருக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் மீ்ண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தான்.
ஐதராபாக்கம் புதூர் பஸ் நிறுத்தத்தில் வந்தபோது ஆட்டோவில் இருந்து இறங்கிய நரேந்திரன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மினி லாரி அவன் மீது மோதியது. தன் கண் எதிரே மகன் மீது மினி லாரி மோதியை பார்த்து ரஞ்சிதா கதறி அழுதார்.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த நரேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவன் பரிதாபமாக இறந்தான். இவனது சில உடல் உறுப்புகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான மினி லாரி டிரைவர் சக்தி(28), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண் எதிரே மினிலாரி மோதி மகன் பலியான சம்பவம் ஐதராபாக்கம் புதூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story