புதுக்கோட்டை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கியது


புதுக்கோட்டை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 24 Aug 2021 5:56 PM GMT (Updated: 24 Aug 2021 5:56 PM GMT)

புதுக்கோட்டை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை:
துப்பாக்கி சுடும் பயிற்சி
தமிழக காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சி போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் போலீசார் வரைக்கும் நடைபெறுவது வழக்கம். சமீபத்தில் பெரம்பலூரில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. 
இதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் 2-ம் இடம் பிடித்து பரிசு பெற்றார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. புதுக்கோட்டை அருகே பசுமலையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
போலீசார்
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முதல் போலீசார் வரை பங்கேற்றுள்ளனர். முதல் நாள் நடந்த பயிற்சியில் 219 பேரும், நேற்று 188 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீசார் பங்கேற்க உள்ளனர். இதில் சிறப்பாக சுடும் போலீசாருக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story