ஆம்பூர் அருகே; ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அருகே ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர்.
கல்குவாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுகொல்லை பகுதியில் 7 தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
குவாரியில் இருந்து ஜல்லி, செயற்கை மணல் மற்றும் ஜல்லி துகள்கள் லாரிகள் மூலம் காட்டுக்கொல்லை பகுதியில் இருந்து ரங்காபுரம், கென்னடிகுப்பம், விண்ணமங்களம், அய்யனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தொழில்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.
கென்னடிகுப்பம் பகுதியில் உள்ள குறுகலான சாலை வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், ஜல்லிதுகள்கள் சாலையில் விழுந்து சாலையோரம் உள்ள வீடுகளில் ஜல்லிதுகள்கள் படிவதாலும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சிறைபிடிப்பு
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கல்குவாரிக்கு சொந்தமான லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.
Related Tags :
Next Story