தீவன புல், மரக்கன்று வளர்ப்பு பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


தீவன புல், மரக்கன்று வளர்ப்பு பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:44 PM IST (Updated: 24 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

மல்லகுண்டா ஊராட்சியில் மாநில தீவன புல், மரக்கன்று வளர்ப்பு பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹவா தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மல்லகுண்டா ஊராட்சியில் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை இணைந்து செயல்படுத்தும் மாநில தீவன அபிவிருத்தி திட்டதின் கீழ் தீவன புல் மற்றும் தீவன மரக்கன்றுகள் நடும் திட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள 17.5 ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனபுல்களான, கொழுக்கட்டை புல் மற்றும் முயல் மசால் ஆகியவற்றை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. 

பின்னர் 1,000 ஏக்கரில் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உள்ளது. 

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 50 ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயககுநர் செல்வராசு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நவனீதகிருஷ்ணன், உதவி இயக்குநர் நாசர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருண், உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story