வேலூர் மாவட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


வேலூர் மாவட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 24 Aug 2021 11:45 PM IST (Updated: 24 Aug 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

வேலூர்

வேலூர் மாநகராட்சி, ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி, ரத்ததானம், போலியோ விழிப்புணர்வு வாகன விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகர நலஅலுவலர் மணிவண்ணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு கொடியசைத்து வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 6 லட்சம் பேர் முதலாவது தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது 50 சதவீதமாகும். முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அனைத்து வீடுகளிலும் கொரோனா தடுப்பூசி சென்று சேர வேண்டும். இதற்கு அரசு மற்றும் மாநகராட்சியுடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
வாகன ஊர்வலம் இன்பென்டரி சாலை, அண்ணாசாலை, தெற்கு போலீஸ் நிலையம், ஆரணி சாலை வழியாக பாகாயம் சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதில், 30-க்கும் மேற்பட்ட கார்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றன.

Next Story