ரேஷன் கடைகளில் முதி்யோர், மாற்றுத்திறனாளிகள கைரேகை பதிவின்றி பொருள் வாங்க வசதி
கைரேகை பதிவின்றி பொருள் வாங்க வசதி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உணவு பொருள் பெற இயலாத நிலை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் அவர்கள் அது தொடர்பான அங்கீகார சான்று கோரிக்கையினை பூர்த்தி செய்து ரேஷன் கடை பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். படிவத்தில் அவர்கள் சார்பில் உணவுப் பொருட்கள் பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் விவரம் தவறாது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப அட்டையில் சம்பந்தப்பட்ட முதியோர், மாற்று திறனாளிகள் தவிர நியாயவிலைக் கடைக்கு வருகை தந்து பொருள் பெறும் தகுதியுள்ள நபர்கள் பெயர் இடம் பெற்றிருப்பின் அவர்கள் இந்த வசதியினை தேர்வு செய்ய அனுமதி இல்லை.
அங்கீகாரச் சான்றிதழை இணைய தளத்திலும் அல்லது ரேஷன் கடை ஊழியரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story