நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 12:20 AM IST (Updated: 25 Aug 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
11 அம்ச கோரிக்கை 
தகுதியுள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கி, புதிய ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு தொகை மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். 
கொரோனா நோய் தொற்று காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.  இதில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார். 
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story