கிராம சாலைகள் தொடர்பான கருத்தரங்கம்- கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்


கிராம சாலைகள் தொடர்பான கருத்தரங்கம்- கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2021 12:46 AM IST (Updated: 25 Aug 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கிராம சாலைகள் தொடர்பான கருத்தரங்கத்தை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கிராம சாலைகள் தொடர்பான கருத்தரங்கத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கம்

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி கிராம சாலைகள் தொடர்பான கருத்தரங்கம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது;-

தரமான சாலை

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நமது துறையின் சார்பில் அமைக்கப்படும் அனைத்து சாலை திட்ட பணிகள் உரிய முறையில் சீர்செய்யப்பட்டு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தரத்துடன் அமைக்கப்பட வேண்டும். முக்கியமாக சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் வெள்ளம் செல்ல ஓடைகள் அமைக்க வேண்டும்.
அப்போது தான் சாலைகள் தரமாக இருக்கும். ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் சாலையின் பங்கு முக்கியமானதாகும். இதை கருத்தில் கொண்டு நல்ல தரமான சாலை அமைக்க வேண்டும்.
இந்த திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இணைப்புகள் இல்லாத 500 மக்கள் தொகை மேலுள்ள அனைத்து குக்கிராமங்களிலும் உள்ள இணைப்பு சாலைகள் தேர்வு செய்து சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

குக்கிராமங்களை இணைக்க

குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை ஆகியவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகள் ஏற்படுத்துவதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சாலைகள் தர கண்காணிப்பாளர் இசக்கிமுத்து செல்வன், செயற்பொறியாளர் அசன் இப்ராகிம், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story