போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு விருதுநகரில் வரவேற்பு
மத்திய ஆயுதப்படை பிரிவு போலீசார் சைக்கிள் பேரணிக்கு விருதுநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர்,
இந்திய சுதந்திர 75-வது ஆண்டை முன்னிட்டு மத்திய ஆயுதப்படை பிரிவு போலீசார் 20 பேர் உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பேரணி மேற்கொள்கின்றனர். கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பேரணியினர் நேற்று காலை விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அவர்களை வரவேற்று வழியனுப்பி வைத்தார். இப்பேரணியினர் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று டெல்லி ராஜ்காட் சென்றடைகின்றனர்.
Related Tags :
Next Story