ஆலங்குளத்திற்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு மீண்டும் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்,
ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, கரிசல்குளம், காளவாசல் நல்லக்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள், ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மில், பேண்டேஜ் துணி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இரவு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களின் நலன்கருதி ராஜபாளையத்திலிருந்து ஆலங்குளத்திற்கு அரசு பஸ் இரவு 12 மணிக்கு விடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இந்த பஸ் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தபட்டுவிட்டது. இப்போது தொழிலாளர்கள் இரவு நேர வேலைக்கு சென்று வருகின்றனர். இரவு நேர பஸ் இல்லாத காரணத்தால் இரவில் வீட்டிற்கு வர முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story