அம்பையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


அம்பையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 Aug 2021 1:10 AM IST (Updated: 25 Aug 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அம்பை:
ஆலங்குளம் மற்றும் முக்கூடல் வழியாக வரும் வாகனங்கள் அம்பை வடக்கு ரத வீதி வழியாக பஸ் நிலையம் சென்று திரும்பும்படி ஒரு வழி பாதையாக உள்ளது. இதில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் பணி தொடங்கி உள்ளது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், துறை கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. 

Next Story