மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 1:14 AM IST (Updated: 25 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு சார்பில் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைப்பளு ஒப்பந்தப்படி பயிற்சி காலம் 3 மாதங்கள் என்பதை கேங்க்மேன் பணியிடத்துக்கும் அமல்படுத்த வேண்டும். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 5 ஆயிரம் கேங்க்மேன்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும். பிற மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கேங்மேன்களை சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்ட தலைவர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் வண்ணமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, பொருளாளர் நாகையன், பாலசுப்பிரமணியன், பூலுடையார், ராமசுப்பிரமணியன், மந்திரமூர்த்தி, மத்திய அலுவலக கோட்ட தலைவர் சுடலைமணி ஆகியோர் கோரிக்கைகளை வளக்கி பேசினர். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story