விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2021 1:46 AM IST (Updated: 25 Aug 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருகே விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 விவசாயி
பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி உடையடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 47), விவசாயி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்தார். 
விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்தார். இருப்பினும் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால், கடந்த சில நாட்களாக சுகுமாரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று சுகுமாரன், விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகுமாரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story