தாய் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை


தாய் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2021 1:55 AM IST (Updated: 25 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

தாய் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன். மர வியாபாரி. இவரது மனைவி வளர்மதி(வயது 35). இவர்களுக்கு இசைமொழி (16) என்ற மகளும், லெனின் (15) என்ற மகனும் உண்டு. இந்நிலையில் வளர்மதியின் தாய் ஜெகதாம்பாள்(58) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் வளர்மதி மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது வளர்மதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயர்லாபாத் போலீசில் வளர்மதியின் தந்தை சிவஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story