சின்ன வெங்காயம் திருடிய வாலிபர் கைது
சின்ன வெங்காயம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாடாலூர்:
சின்ன வெங்காயம் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை, வயலில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த சரவணன், தனது தோட்டத்தில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்தார்.
கைது
இந்நிலையில் நேற்று மாலை அவரது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பட்டறையில் இருந்து சின்ன வெங்காயங்களை 2 மூட்டைகளில் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து, பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த ராமு(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story