விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
விவசாயியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள செட்டித்திருக்கோணம் மேலத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 50). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(30). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அன்பழகனின் நிலத்தில் இருந்த எலுமிச்சை மரத்தை மாரிமுத்து வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாரிமுத்துவிடம், அன்பழகன் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் மாரிமுத்து அன்பழகனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அன்பழகன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அன்பழகன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story