வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2021 2:46 AM IST (Updated: 25 Aug 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். மாமியாரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். மாமியாரை வலைவீசி தேடிவருகிறார்கள். 

வரதட்சணை கொடுமை

பெங்களூரு உரமாவு அருகே முனிரெட்டி லே-அவுட்டில் வசித்து வருபவர் மிதுன்ரெட்டி(வயது 35). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுருதி(32) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மிதுன்ரெட்டி கேட்ட வரதட்சணயை சுருதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். 

திருமணம் முடிந்த புதிதில் தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிதுன், மனைவி சுருதியிடம் ‘‘சொந்தமாக பேட்மிண்டன் மைதானம் அமைக்க உன் பெற்றோர் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் வரதட்சணையாக வாங்கி வா’’ எனக் கூறியுள்ளார். 

ஆனால் அதற்கு சுருதி மறுத்துள்ளார். இதனால் மிதுன், சுருதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கு மிதுனின் தாய் பாக்கியம்மாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுருதி, நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மிதுன், அவரது தாய் பாக்கியம்மா தலைமறைவாகிவிட்டனர்.

கைது

இதுகுறித்து சுருதியின் பெற்றோர், ராமமூர்த்திநகர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிதுனை கைது செய்தனர். தலைமறைவான பாக்கியம்மாவை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story