சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 79 பேர் பாதிப்பு ; 2 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 79 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 79 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 80 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 34 பேரும், ஆத்தூர் ஒன்றிய, நகராட்சி பகுதிகளில் தலா 6 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 95 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,624 பேர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 108 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 1,099 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 79 வயதுடைய முதியவரும், 70 வயதுடைய மூதாட்டியும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,624 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story