சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா கற்பகபொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளல்
ஏரல் சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி கற்பக ெபான் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஏரல்:
ஏரல் சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி கற்பக ெபான் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
முத்துமாலை அம்மன்
ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா கடந்த 17-ஆம் தேதி கால் நட்டுடன் கொடை விழா தொடங்கியது. முக்கிய கொடை விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதனை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மதியம் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்து கொண்டு வருதல் போன்ற நேமிச கடன்களை செலுத்தினர்.
வீதி உலா
இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் முன்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. தொடர்ந்து அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வீட்டு முன் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். உலா சென்ற அம்மன் நேற்று காலையில் கோவில் வந்து சேரும் ஆனந்த நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்தது வருவதால் கொடைவிழா அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story