தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து ரெயில்வே பாதை பிரிவில் கோட்ட மேலாளர் ஆய்வு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து ரெயில் பாதை பிரிவில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து ரெயில் பாதை பிரிவில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சரக்கு போக்குவரத்து
மதுரை கோட்ட ரெயில்வேயில் சரக்கு போக்குவரத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய நகரமாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு ஏற்றுமதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து ரெயில்கள் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.
அதே போன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரெயில் மூலம் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனால் மதுரை கோட்ட ரெயில்வே சரக்கு போக்குவரத்தில் தூத்துக்குடியின் பங்களிப்பு முக்கியமானது ஆகும்.
ஆய்வு
இதைத் தொடர்ந்து ரெயில் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தார். அங்கு உள்ள சரக்கு போக்குவரத்து ரெயில் பாதை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து சரக்கு போக்குவரத்து தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை
பின்னர் தூத்துக்குடியில் உள்ள தொழில் வர்த்தக நிறுவன பிரமுகர்களையும் நேரில் சந்தித்து ரெயில்வே சரக்கு போக்குவரத்து மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். ஸ்பிக் நிறுவன இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், பாலு மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story