135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை. கலெக்டர் அமர் குஷ்வாஹா வழங்கினார்
135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் காற்றுப்படுக்கைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி, நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது திருப்பத்தூர், கந்திலி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 208 ஊராட்சிகளில் சிறப்பு கொரோனா தடுப்புபூசி முகாம்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்தி பயன்பெற வேண்டும். வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 150 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக 120 மனுக்கள்மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ், டாக்டர்கள் செல்வநாதன், செந்தில்நாதன், சசிகலா, பிரபாவராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story