விளாத்திகுளம் அருகே மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
விளாத்திகுளம் அருகே சாலையோர மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து நேற்று நாகலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 135-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே சாலையோர மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து நேற்று நாகலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 135-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தின் மின்தேவைக்காக நாகலாபுரம் மின்சார வாரியத்தில் இருந்து மின்சாரம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நாகலாபுரம், புதூர் வழியாக மின்சார கம்பங்கள் அமைத்து மின் வயர்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் நாகலாபுரத்தில் நேற்று வியாபரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி அங்கு சுமார் 135-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
பரபரப்பு
மேலும் நாகலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நாகலாபுரம், சமத்துவபுரம், ரெட்டியபட்டி, சமத்துவபுரம் கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். எனவே அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story