திருச்செந்தூரில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை


திருச்செந்தூரில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2021 6:55 PM IST (Updated: 25 Aug 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமி
திருச்செந்தூர் வண்ணாந்திரவிளை முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோசல்ராம். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 46). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு நந்தகுமார் (21) என்ற மகனும், சொர்ணமதி (20), தமயந்தி (17) ஆகிய மகள்களும் உள்ளனர். மகன் ஐ.டி.ஐ. முடித்து விட்டு வெளியூரில் வேலை செய்கிறார். முதல் மகள் பட்டர்குளம் தெருவில் உள்ள கடையில் வேலை செய்கிறார்.
தமயந்தி சில மாதங்களுக்கு முன்பு கோவில் வாசல் கடையில் வேலை பார்த்துள்ளார். தற்போது சன்னதி தெருவில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ராஜலட்சுமி வெளியூர் சென்று விட்டார். இரு மகள்களும் வேலைக்கு சென்று விட்டனர். இரவு 8.30 மணியளவில் சொர்ணமதி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
தற்கொலை
அப்போது கதவு உள்புறம் பூட்டியிருந்தது. உள்ளே திறந்து சென்று பார்த்த போது தமயந்தி விட்டத்தில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து சொர்ணமதி கோவில் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி வருகிறார். தமயந்தி எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story