பொது மாறுதல் கலந்தாய்வு
திண்டுக்கல்லில் செவிலியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது.
முருகபவனம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் உள்ள செவிலியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பொது மாறுதல் கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
இணையதள வழியில் நடைபெற்று வரும் இந்த இடமாறுதல் கலந்தாய்வில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.
இதனை இணை இயக்குனர் (பொறுப்பு) அன்புச்செல்வன் முன்னிலையில் நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர் அந்தோணி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
----------
Related Tags :
Next Story