உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை


உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 25 Aug 2021 7:44 PM IST (Updated: 25 Aug 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது.

திண்டுக்கல்;

மக்கள் நீதிமய்யம் கட்சியின் திண்டுக்கல் தென்கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசபாபு தலைமை தாங்கினார். 

இதில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர் மூகாம்பிகை ரத்தினம், மண்டல அமைப்பாளர் அழகர், மாவட்ட இணை செயலாளர் ஜெகநாதன், துணை செயலாளர்கள் சமேஸ்வரி, மணிகண்டன், பொருளாளர் குருவாயூரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story