உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் 3,228 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்


உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் 3,228 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்
x

உங்கள் தொகுதியில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 3,228 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 3,228 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
நலத்திட்டங்கள்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 3,228 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 156 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 81 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மனுக்களுக்கு தீர்வு
விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசுகையில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 7,708 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 4,295 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் போலீசார் உள்பட முன்கள பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
தாமதமாக தகவல்
நிகழ்ச்சி முடிந்த பின்னர் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி கலெக்டர் திவ்யதர்சினிடம் கூறுகையில், இந்த நிகழ்ச்சி குறித்து  அதிகாரிகள் தனக்கு தாமதமாக தகவல் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார்.

Next Story