வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு
வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு நடந்துள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி அருள் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சேசுராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அல்போன்சா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று அல்போன்சாவின் ஒரு மகள் டியூசனுக்கு சென்றுவிட்டார். மற்றொரு மகளுடன் அல்போன்சா ஆதார் கார்டில் திருத்தம் செய்ய தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story