கல்வராயன்மலையில் ரூ 8 கோடியில் விளையாட்டு மைதானம்
கல்வராயன்மலையில் மத்திய அரசு சார்பில் ரூ 8 கோடியில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்
கச்சிராயப்பாளையம்
கலெக்டர் ஆய்வு
கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட ஏகவலைவா மேல்நிலைப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடியபடி கணினி பற்றிய கேள்விகளை கேட்டார்.
இதைத்தொடர்ந்து பள்ளியின் பின்புறத்தில் மத்திய அரசு சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய மைதானம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் சுற்றுலா துறை சார்பில் பூங்கா அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.
தாலுகா அலுவலகம்
பின்னர் வெள்ளி மலையில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்த அவர் அதே பகுதியில் புதிதாக ரூ.4¼ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலகத்தையும் பார்வையிட்டார். அப்போது கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், சுற்றுலா அலுவலர் அப்ராசித்தன், மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர்கள் அருண்ராஜா, அருண் பிரசாந்த் மற்றும் கல்வராயன்மலை தாசில்தார் அசோக், மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன், தனி தாசில்தார் இந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story