கிருஷ்ணகிரி அருகே சோகம் மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி போலீஸ் விசாரணை


கிருஷ்ணகிரி அருகே சோகம் மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2021 9:54 PM IST (Updated: 25 Aug 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி அருகே பாலேக்குறி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். துணி தைக்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் லோகேஷ்வர சக்தி (வயது 22). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விபத்தில் பலி
துர்வாசபள்ளம் என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல்கல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ்வர சக்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லோகேஷ்வர சக்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராணுவ வீரர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story