வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை அதிகாரிகள் சமரசம்
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிராம மக்கள் முற்றுகை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஜோடுகொத்தூர், நாச்சிகுப்பம், மணவரானப்பள்ளி, கங்கோஜிகொத்தூரை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவாயிகள் சோமசுந்தரம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாசில்தார் பிரதாப், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகேசவன், பாலாஜி மற்றும் வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலிசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கோழி பண்ணைகளுக்கு எதிர்ப்பு
அப்போது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், ஏற்கனவே உள்ள கோழி பண்ணைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக கோழி பண்ணைகள் அமைக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் மக்க்ள வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கோழி பண்ணைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் பண்ணைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறினர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story