பள்ளிபாளையத்தில் இட்லி மாவு கடையில் சூதாடிய 7 பேர் கைது 1½ டன் ரேஷன் அரிசியும் பறிமுதல்


பள்ளிபாளையத்தில் இட்லி மாவு கடையில் சூதாடிய 7 பேர் கைது 1½ டன் ரேஷன் அரிசியும் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Aug 2021 10:03 PM IST (Updated: 25 Aug 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் இட்லி மாவு கடையில் சூதாடிய 7 பேர் கைது 1½ டன் ரேஷன் அரிசியும் பறிமுதல்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் இட்லி, தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடையில் தினசரி பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் அலமேடு பகுதி சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு இட்லி மாவு கடையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த சரவணன் (வயது 41), கோகுல் (34), பெரியசாமி (24), செல்வகுமார் (27), தில்லைநகர் மணி (37), ஆவாரங்காடு பிரபு (34), யுவராஜ் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதே கடையில் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசி இருப்பதை பார்த்த போலீசார் அதையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அரிசி மூட்டைகளை நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் பிரிவுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story