திருக்கோவிலூர் நகராட்சியுடன் மேலத்தாழனூரை இணைக்க எதிர்ப்பு


திருக்கோவிலூர் நகராட்சியுடன் மேலத்தாழனூரை இணைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Aug 2021 10:03 PM IST (Updated: 25 Aug 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகராட்சியுடன் மேலத்தாழனூரை இணைக்க எதிர்ப்பு கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 
திருக்கோவிலூர் தாலுகா மேலத்தாழனூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். விவசாய தொழில் மற்றும் கூலி வேலையை நம்பி வாழ்ந்து வருகிறோம். முக்கியமாக தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நம்பிதான் குடும்பம் நடத்தி வருகிறோம். 

இந்தநிலையில் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருக்கோவிலூருடன்  மேலத்தாழனூர் ஊராட்சியை சேர்ப்பதாக கூறப்படுகிறது. திருக்கோவிலூர் நகராட்சியில் மேலத்தாழனூர் ஊராட்சியை சேர்த்தால் எங்களின் விவசாய தொழில் பாதிக்கும், மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை கிடைக்காது. இதனால் குடும்பம் நடத்த முடியாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகும்.எனவே மேலத்தாழனூர் ஊராட்சியை திருக்கோவிலூர் நகராட்சியில் இணைக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story