கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபடுட்டனர். அப்போது கொடமாத்தி மற்றும் நாரணப்பட்டி கிராமத்தில் உள்ள ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story