நாமக்கல்லில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


நாமக்கல்லில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 25 Aug 2021 10:11 PM IST (Updated: 25 Aug 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் 4 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட உள்ளது. அதன்படி 3, 4, 9 மற்றும் 10-வது வார்டு பொதுமக்களுக்கு ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 11, 13, 14 மற்றும் 20-வது வார்டு பொதுமக்களுக்கு பிரதான சாலை தொடக்கப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 21, 22, 24, 25, 31 மற்றும் 34-வது வார்டு பொதுமக்களுக்கு துறையூர் சாலை பாவலர் முத்துசாமி நகராட்சி மண்டபத்திலும், 38 மற்றும் 39-வது வார்டு மக்களுக்கு கொண்டிசெட்டிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் தடுப்பூசி போடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இன்று ஒரே நாளில் நாமக்கல்லில் 4 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் 1,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
=========

Next Story