டிப்ளமோ என்ஜினீயரை சாதி பெயரை சொல்லி தாக்கியதாக 2 பேர் கைது
டிப்ளமோ என்ஜினீயரை சாதி பெயரை சொல்லி தாக்கியதாக 2 பேர் கைது
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 19). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி கொண்டு உள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடுவது வழக்கம். அவர்களுடன் கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் (22), புதுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா (19) ஆகியோரும் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆனந்தராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் விஜய் விளையாடி கொண்டிருந்தபோது அவரை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் புதுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆனந்தராஜ் மற்றும் சூர்யா இருவரும் விஜய்யை சாதி பெயரை சொல்லி திட்டி கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த விஜய் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விஜய்யை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story