திருப்பூரில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை


திருப்பூரில் பொதுமக்களுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை
x
தினத்தந்தி 25 Aug 2021 10:14 PM IST (Updated: 25 Aug 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை

திருப்பூர், 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து அறிக்கை தயார் செய்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக பல சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பொதுமக்களுக்கு மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. 
இதில் தமிழகத்தை பொறுத்தவரை தொற்று குறைந்த மற்றும் அதிகமாக உள்ள மாவட்டங்கள் என கோவை, ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 
திருப்பூர் மாவட்டத்தில் இதற்காக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் பொதுமக்களில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பல்வேறு பிரிவுகளாக நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாநகரில் ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பரிசோதனையை மருத்துவ குழுவினர் செய்தனர்.

Next Story