ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்த வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஜோலார்பேட்டை அருகே  ரெயிலில் கடத்த வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Aug 2021 10:23 PM IST (Updated: 25 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் கடத்த வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டைைய அருகில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஓடும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் செல்வக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது ரெயிலில் ஏற்றி கடத்துவதற்காக பிளாட்பாரத்தில் மறைவான பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும் பறக்கும் படை தாசில்தார் சம்பத் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Next Story