குமரலிங்கம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரலிங்கம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக பூசணி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காய்கறிகள் சாகுபடி
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிகள் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் நிலவி வரும் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நடவு, அறுவடை போன்ற பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பெருமளவு எந்திரங்கள் உதவியுடனும், குறைந்த பணியாளர்களைக் கொண்டும் சாகுபடிப்பணிகளை மேற்கொள்ளும் வகையிலான பயிர்களை விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
ஊடுபயிர் சாகுபடி
அந்தவகையில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். அதேநேரத்தில் தென்னை வளர்ந்து பலன் தரும் வரையில் குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டும் வகையில் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்கின்றனர். அந்தவகையில் குறைந்த பராமரிப்பு, குறைந்த பணியாளர்கள், குறைந்த செலவு என்ற வகையில் பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குமரலிங்கம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-
பூசணி சாகுபடியைப் பொறுத்தவரை சாம்பல் நோய் மற்றும் பழ ஈக்கள் பிரச்சினையாக இருக்கும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
மேலும் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். அறுவடை செய்த காய்களை 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது தண்ணீர், உரம் போன்றவற்றுக்கான செலவினங்கள் குறைகிறது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story